கேடி ரேம்போ கில்லாடி அர்னால்டு

NT_131003174037000000

 

சூரியன் ஒருவேளை மேற்கே உதித்தால் ரஜினியும், கமலும் இணைந்து இனி ஒரு படம் நடிக்கலாம். விஜய், அஜீத் இணைந்து ஒரு படம் நடிக்கலாம். அந்த அளவுக்கு இங்கு நான் பெரிய நடிகரா, நீ பெரிய நடிகரா என்ற ஈகோ கொடி கட்டிப் பறக்கிறது. ஆனால் மேடையில் கட்டிப்பிடித்துக் கொள்வார்கள். ஆனால் சினிமாவின் உலக தலைநகரான ஹாலிவுட்டில் இதெல்லாம் சகஜமப்பா… 5 டாப் ஹீரோக்கள் இணைந்து நடித்த படமே வந்துவிட்டது.

இப்போது லேட்டஸ்டாக ஹாலிவுட் ரஜினியும், கமலுமான அர்னால்டும், சில்வர்ஸ்டோலனும் இணைந்து நடித்துள்ள எஸ்கேப் பிளான் என்ற படம் வருகிற 18ந் தேதி ரிலீசாக இருக்கிறது. பலத்த பதுகாப்பு நிறைந்த சிறையில் நிரபராதியான சில்வர்ஸ்டோலன் அடைக்கப்படுகிறார். அவருக்கு இன்னொரு கைதியான அர்னால்டு தப்பிக்க உதவி செய்வதோடு அவரை ஜெயிலுக்கு அனுப்பியவர்களை வேட்டையாடவும் கிளம்புகிறார். பரபரப்பான ஆக்ஷன் படம். உலகம் முழுவதும் எதிர்பார்ப்பை கிளப்பி  இருக்கும் படம்.

தமிழிலும் டப் செய்து ரிலீஸ் செய்கிறார்கள். தமிழில் படத்துக்கு வைத்துள்ள தலைப்புதான் கேடி ரேம்போ கில்லாடி அர்னால்டு.

Searched Keyword:

  • arnold cinema news at tamil (1)
  • ஜோதிகா (1)

 

0 Comments

You can be the first one to leave a comment.

Leave a Comment